முக்கிய ஆவணங்களை மாற்றும் சசிகலா? - பின்னணி என்ன?

திங்கள், 18 ஜூன் 2018 (14:27 IST)
சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான தொலைக்காட்சியை முடக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும், இந்த சேனலை நடத்தும் நிறுவனத்தின் பங்குகளை வேறொருவர் பெயருக்கு மாற்றும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறதாம். ஏற்கனவே, டிடிவி தினகரன் மற்றும் திவாகரனுக்கு இடையேயான மோதல் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், ஜெ.வின் பெயரில் உள்ள தனியார் தொலைக்காட்சியை முடக்கும் முயற்சிகள் நடப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.  அதாவது, ஊழல் வழக்கில் சிக்கியிருப்பவர்கள் தொலைக்காட்சியை நடத்தக்கூடாது எனக்கூறி இந்த தொலைக்காட்சியின் உரிமத்தை ரத்து செய்ய டெல்லி தரப்பு முயன்று வருவதாக கூறப்படுகிறது. எனவே, ஒளிபரப்பை நிறுத்துமாறு சமீபத்தில் கடிதம் அனுப்பப்பட்டதாம்.
 
இந்த விவகாரம் உடனடியாக சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட, உடனடியாக வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதற்கு தடையை பெற்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இந்த தொலைக்காட்சியை மாவிஸ் சாட்கம் என்கிற நிறுவனம்தான் நடத்துகிறது. இந்த நிறுவனத்தில் சசிகலாவிற்கு 70-80 சதவீத பங்குகள்  இருக்கிறது எனக் கூறப்படுகிறது.  
 
எனவே, மத்திய அரசு வேறு நடவடிக்கை எடுக்கு முன் தன் பெயரில் உள்ள பங்குகளை வேறொருவர் பெயரில் மாற்றும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்