சசிகலா புஷ்பா மீது மேலும் ஓரு புகார்: சாதி பெயரை சொல்லி திட்டினார்!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (12:41 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா மீது அடுக்கடுக்காக புகார்கள் வந்தவாறு உள்ளன. ஏற்கனவே நெடுஞ்சாலை துறையில் காண்ட்ராக்ட் வாங்கி தருவதாக கூறி சில லட்சங்கள் ஏமாற்றினார் என புகார் வந்தது.


 
 
சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை பார்த்த இரண்டு இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல புகார்களை கூறினர். இந்நிலையில் சசிகலா புஷ்பா சாதி பெயரை சொல்லி திட்டி தனக்கு கொலை மிரட்டல் விடுத்தாக ஒருவர் கூறியுள்ளார்.
 
காசி ஈஸ்வரன் என்பவர் நேற்று சாத்தான்குளம் டிஎஸ்பியிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் சசிகலா புஷ்பா கடந்த நவம்பர் மாதம் அடையல் முதலூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு என்னை அழைத்து நாலுமாவடி அய்யா கோயிலுக்கு என் சொந்த செலவில் மண்டபம் கட்டி கொடுக்க உள்ளேன். லேபர் கான்ட்ராக்ட் ஆகத்தான் வேலை தர முடியும். எனவே எவ்வளவு வேண்டும், என்றார்.
 
3 லட்சம் காண்ட்ராக்டுக்கு ரூ.50 ஆயிரம் குறைத்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வாங்கிக் கொள்ள சொல்லி அட்வான்சாக ரூ.20 ஆயிரம் தந்தார். மீதி பணத்தை வேலை முடிந்த பின் தருவதாக கூறினார். மண்டப வேலையை 3 மாதத்தில் முடித்து தர கூறினார்.
 
சொன்னபடி நான் 3 மாதத்தில் மண்டப பணிகளை முடித்து கொடுத்து விட்டேன். சசிகலா புஷ்பாவின் தந்தை தியாகராஜனும் அப்போது உடனிருந்தார், அவர் பேசியபடி என் ஆட்டோ வாடகை தரவில்லை. இதனையடுத்து பிப்ரவரி மாதம் தூத்துக்குடி மடத்தூர் ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று சம்பள பாக்கியை கேட்டேன்.
 
அப்போது அவர், அடுத்த வாரம் ஊருக்கு வருவேன். அங்கு வந்து மீதி பணத்தை வாங்கி கொள்ளுமாறு கூறினார். அவர் கூறியதுபோல அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அடையல் முதலூரில் உள்ள சசிகலா புஷ்பா பண்ணை வீட்டுக்கு நான் சென்றேன். அங்கு இருந்த சசிகலா புஷ்பாவிடம் சம்பள பணம் கேட்டேன். ஆட்டோ வாடகை பாக்கியையும் வாங்கி தருமாறு கேட்டேன்.
 
அப்போது சசிகலா புஷ்பா டென்சனாகி இந்த இடத்தை விட்டு போயிருங்க, உனக்கு இனி எந்த சம்பள பாக்கியும் தர முடியாது என்று கூறி சாதி பெயரை சொல்லி திட்டினார். எனவே எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை தராமலும், மினிடெம்போவை அபகரித்து சாதியை சொல்லி திட்டி மிரட்டிய அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்