சசிகலா புஷ்பா வீட்டில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி எறிந்த அதிகாரிகள்!

வெள்ளி, 28 அக்டோபர் 2022 (16:14 IST)
பாஜக பிரமுகர் சசிகலா புஷ்பா வீட்டுக்குள் இருந்த பொருள்களை எடுத்து மத்திய அரசு அதிகாரிகள் வெளியே வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற சசிகலா புஷ்பாவின் எம்பி பதவி காலம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதனை அடுத்து அரசு அவருக்கு ஒதுக்கிய வீட்டை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது
 
ஆனால் இந்த நோட்டீசை கண்டுகொள்ளாமல் சசிகலா புஷ்பா வீட்டை காலி செய்யாமல் இருந்தார். இந்த நிலையில் மத்திய அரசு அதிகாரிகள் இன்று சசிகலாவின் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து வெளியே வைத்து விட்டு வீட்டில் வைத்து பூட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அதேபோல் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அவர்களும் வீட்டை காலி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்