தமிழக முதலமைச்சராக சசிகலா நாளை அல்லது நாளை மறுநாள் பதவியேற்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
ஆனால், முன்னதாக போயஸ் கார்டனில் சில சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதாவது செவ்வாய் அன்று மாலை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனக்கு எந்த பதவியும் வேண்டாம். அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று சசிகலாவிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்.
ஆனால் அந்த கடிதத்தை சசிகலா ஏற்க மறுத்ததோடு, விலகல் கடித்தால் மிகுந்த வருத்தம் கலந்த கோபத்தோடு இருந்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்க உள்ள இந்த நேரத்தில் பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து விலகினால் தனக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என்று சசிகலா கருதியுள்ளார்.
இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தை சமானப்படுத்தும் முயற்சியிலும் போயஸ் கார்டனில் உள்ளவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், இந்த நடவடிக்கையில் சமாதானம் அடையாததால் தான் பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதிக்குச் சென்று மவுன அஞ்சலி செலுத்தியதாக தெரிகிறது.
அதனால் தான் மவுன அஞ்சலி குறித்து விளக்கிய போது, ‘மனசாட்சி உந்தப்பட்டதால் ஜெ., நினைவிடத்திற்கு வந்தேன்” என்று தெர்வித்துள்ளார் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.