'சர்கார்' படத்தின் உண்மையான வெற்றி இதுதான்

ஞாயிறு, 18 நவம்பர் 2018 (15:28 IST)
விஜய் நடித்த சர்கார் திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் அரசு கொடுக்கும் இலவச பொருட்களை அவமதிக்கும் காட்சி இருப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டம் செய்ததால் அந்த காட்சிகள் நீக்கப்பட்டு பின் மீண்டும் திரையிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டிவிட்டது, ரூ.200 கோடியை தாண்டிவிட்டது என்று பெய்டு டுவிட்டர் பயனாளிகள் கடந்த சில நாட்களாக வடை சுட்டு வருகின்றனர். இந்த படம் கோடி கோடியாக வசூல் செய்து தயாரிப்பாளருக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபம் கொடுத்ததா? என்பது உண்மையில் தெரியவில்லை

ஆனால் இந்த படத்தால் 49P குறித்த விழிப்புணர்வு பலரிடம் ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை.சமீபத்தில் ஒரு பிரபல கல்லூரியில் சுமார் 85 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போட்டி ஒன்றில் 'சர்கார்' படத்தில் இடம்பெற்ற 49P குறித்த கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்விக்கு பெரும்பாலான மாணவர்கள் சரியான பதிலை எழுதியிருந்தனர். இதே கேள்வி இரண்டு மாதங்களுக்கு முன் கேட்கப்பட்டிருந்தால் ஒரு மாணவர் கூட சரியான பதிலை எழுதியிருப்பாரா என்பது சந்தேகமே! மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு நல்ல விஷயம் கூறப்பட்டிருந்ததே சர்கார்' படத்தின் உண்மையான வெற்றியாக கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்