விஜய் ஆண்டனியின் தொடர் தோல்வியும் - சோக வாழ்க்கையும்

சனி, 17 நவம்பர் 2018 (16:49 IST)
கதாநாயகர்களாகி மக்கள் மனதில் ஆழமாகபதிந்தாலும் கூட  இன்னும் ஹீரோக்களை மட்டும் நம்பி நம் மக்கள் திரையரங்கிற்கு செல்வதில்லை. மாறாக இயக்குநர், இசை போன்ற மற்ற காரணிகளும் இதனை மாற்றுகின்றன. 
 
ஆனால் கதாநாயகனாகிய குறுகிய காலத்திலேயே இயக்குநர் யார் என்றெல்லாம் யோசிக்க விடாமல் மக்களை திரையரங்கிற்கு இழுத்தவர் விஜய் ஆண்டனி. ஆரம்பத்தில் அவர் தேர்வு  செய்து நடித்த ஒவ்வொரு கதைகளும், ஆபாசமில்லாத அடிதடி அதிகம் இல்லாத அனைத்து மக்களும் பார்ப்பது போன்ற  படங்களை தொடர்ந்து கொடுத்தது தான்  இதற்கு காரணம். 
 
இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, `நான்’ படத்தின் மூலம் நடிகராகவும் வலம் வர ஆரம்பித்தார். `சலீம்’, ’இந்தியா பாகிஸ்தான்’, `பிச்சைக்காரன்’, `சைத்தான்’, `எமன்’, ’அண்ணாதுரை’ என வரிசையாகப் பல படங்களில் நடித்தார்.
 
அமைதியான ஹீரோவாக வலம் வந்த விஜய் ஆண்டனி புது அவதாரம் எடுக்கிறேன் என்று கூறி தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டார். அந்தவகையில் கடந்த இரண்டு மூன்று படங்களில் ஆக்‌ஷன் ஹீரோவாக களத்தில் குதித்து அத்தனையும் கெடுத்துக்கொண்டார்.
 
அந்த வகையில் அவர்  நடிப்பில் வெளிவந்தது  'அண்ணாதுரை' , இந்த படத்தில் அண்ணன் தம்பி என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்ததால் அண்ணாதுரை என்று டைட்டில் வைத்துள்ளனர். ஒரு வேளை விஜய் ஆண்டனிக்கு ஒரு அக்கா இருந்திருந்தால் அக்காதுரை என பெயரிட்டிருப்பார்களோ..? என நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டு அவரின் சினிமா வாழ்க்கைக்கு உலை வைத்தனர். 
 
அண்ணாதுரையில்  'சுத்தத்திலும் சுத்த தங்கமாக"  நடித்தவருக்கு படம் பிளாப் ஆனது தான் மிச்சம் ..
 
மேலும், கிருத்திகா உதயநிதி  இயக்கிய  காளி படமும் எதிர்பார்த்த வெற்றியில் பாதி அளவு கூட அடையாமல்  விஜய் ஆண்டனியின்  மார்க்கெட்டையே குப்புற கவிழ்த்து போட்டது.  
 
இப்படி அடுக்கடுக்காக பல தோல்விகளை சந்தித்து வந்த விஜய் ஆன்டனிக்கு தைரியம் கொடுத்து தூக்கி நிறுத்தியது பிச்சைக்காரன் படம் தான் . இந்த  படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது, அம்மா பிள்ளையின் பாசப்பிணைப்பை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் பிச்சைக்காரன் படம் அனைத்து  தரப்பினரிடையே பாராட்டை பெற்றது. 
 
இப்படி இவரின் நடிப்பில் வெளிவரும் படங்கள் கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வியை தழுவி வருகிறது . பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த படமும் இவருக்கு அமையவில்லை. 
 
இந்நிலையில், தானே தயாரித்து நடித்து நேற்று வெளியான ‘திமிரு பிடிச்சவன்’ படமும் போதிய வரவேற்பை பெறவில்லை. இப்படி தொடர் தோல்விகளை சந்தித்ததால், இனிமே சொந்த தயாரிப்பில் நடிப்பதில்லை என விஜய் ஆண்டனி முடிவெடுத்துள்ளாராம்.
 
அடுக்கடுக்கான தோல்வியால் முதலீடு செய்த பணத்தை எடுக்க  முடியாமல் திணறிய விஜய் ஆண்டனி பலரிடத்தில் கடன் வாங்கியுள்ளார். 
 
இதனால் இனி இரண்டு வருடத்திற்கு படம் தயாரிக்காமலும், இசையமைக்காமலும் இருக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்