கேந்திரிய வித்யா பள்ளிகளில் ஏன் காலை உணவு திட்டம் இல்லை.. சரவணன் அண்ணாத்துரை கேள்வி..!

Siva

திங்கள், 15 ஜூலை 2024 (19:00 IST)
காலை உணவு திட்டம் என்பது புதிய கல்விக் கொள்கையில் உள்ள திட்டம் என்று அண்ணாமலை கூறிய நிலையில் புதிய கல்விக் கொள்கையில் உள்ள திட்டம் என்றால் கேந்திரிய வித்யா பள்ளிகளில் ஏன் இந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை என திமுகவின் சரவணன் அண்ணாதுரை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
காலை சிற்றுண்டித் திட்டத்தை திமுக கண்டுபிடித்ததோ இல்லையோ,  ஆனால் திமுக தான், முதல்வர் ஸ்டாலின் தான் சிறப்பான முறையில் தொடங்கி வைத்து சிறார்களின் பசியை போக்கி வருகிறார். 
 
திமுகவின் சிறப்பான திட்டத்தைக் கண்டு வயிறெரிந்து, என்ன உணவு கொடுக்கிறார்கள், எந்த அளவு புரதச்சத்து உள்ளது என அறியாமல், தத்துபித்தென்று பேசிக் கொண்டுருக்கிறார் 
அண்ணாமலை
 
பாஜக ஆளுகின்ற எத்தனை மாநிலங்களில் இந்த காலை சிற்றுண்டித் திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது?  புதியக் கல்விக்கொள்கையில் உள்ளது என்றால் ஒன்றிய அரசு ஏன் எல்லா கேந்திரிய வித்யா பள்ளிகளிலும் அமல்படுத்தப்படவில்லை? 
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்