அட சுப்ரிம் ஸ்டார் சரத்குமாரே சொல்லிட்டாரு... எடப்பாடியார் கேட்பாரா??

புதன், 19 ஆகஸ்ட் 2020 (12:27 IST)
நடிகரும் இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் பொதுபோக்குவரத்து குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழகத்தில் பெரும்பாலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில், எளிமையாக மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் செல்ல இ-பாஸ் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
 
தமிழக அரசு பொருளாதார ரீதியாக சில வர்த்தகங்களுக்கு ஏற்கெனவே அனுமதி அளித்திருப்பதால், தமிழகத்தில் படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் சுய வாகனம் இல்லாத மக்கள் அனைவரும் பொது போக்குவரத்து சேவை எப்போது துவங்கப்படும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 
 
மேலும், பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்கு பொது போக்குவரத்து அவசியம் என கருதுகிறேன். எனவே, கடினமான சூழலை கருத்தில் கொண்டு குறைந்த செலவில் ஏதுவாக பயணம் மேற்கொள்ள, உரிய வழிகாட்டு நெறிமுறையுடன் பொது போக்குவரத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனுமதியளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 
 
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று சரத்குமார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்