காலில் விழுந்து கேட்கிறேன்… அதைமட்டும் செய்யாதீர்கள் -சரத்குமார் பிரச்சாரம்!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (11:46 IST)
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஓட்டுப்போட பணம் மட்டும் வாங்காதீர்கள் எனக் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. அதில் இன்று மாலை சரத்குமார் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். இதையடுத்து இப்போது கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் மதுரை வடக்கு தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் அழகரை ஆதரித்து பல பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ’70 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழகத்துக்கு எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நாங்கள் ஒத்த கருத்து கொண்ட உழைப்பால் உயர்ந்தவர்கள். காலில் விழுந்து கேட்கிறேன், தயவு செய்து ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்