நீதிமன்றத்தில் சயன், மனோஜ் ஆஜர்! போலீசாரிடம் மாஜிஸ்திரேட் சரிதா சரமாரி கேள்வி

செவ்வாய், 15 ஜனவரி 2019 (11:43 IST)
கோடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் குறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டி  அண்மையில் வீடியோ  வெளியிட்டார். 

கூலிப்படைத் தலைவன் சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரிடம் எடுத்த பேட்டிகளையும் அந்த வீடியோவில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் குற்றச்சாட்டுகளைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்ததோடு, அவதூறு தகவல்கள் பரப்பியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி  சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சயன், வாளையார் மனோஜ் ஆகியோரை டெல்லியில் தமிழக போலீஸார் கைது செய்தனர் .
 
இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில், சயன் மற்றும் மனோஜை  போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசாரிடம்  மாஜிஸ்திரேட் சரிதா சரமாரி கேள்வி எழுப்பினார். 
 
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள பிரிவுகளின்படி, அவர்களது பேட்டியால் எங்கு கலவரம் ஏற்பட்டது, அரசுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது .  
 
புகார்தாரரான எடப்பாடி பழனிச்சாமியிடம் இது குறித்து விசாரித்து விளக்கம் பெற்றீர்களா ?  என சரமாரியாக நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் உங்கள் தரப்பு வழக்கறிஞர் யார் என மாஜிஸ்திரேட்டின் கேட்டதற்கு, டெல்லியில் இருந்து வழக்கறிஞர்கள் வருவார்கள் என சயனும் மனோஜும் பதில் அளித்தனர். இதையடுத்து கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சயான்,மனோஜை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என நீதிபதி மறுத்துவிட்டார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்