மணல் லாரியே ரூ.500 கொடுக்கிறான்... உனக்கென்ன...? போலீஸின் அடாவடி..

ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (16:33 IST)
மதுரை நான்கு வழி சாலையில் போக்குவரத்து போலீஸார் லாரி ஓட்டுநர்களிடம் அதட்டி லஞ்சம் வாங்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான வாகனங்கள் மதுரை நிங்ரோடு வழியாகத்தான் செல்லும் இதனைப்பயன்படுத்தி மதுரை போக்குவரத்து போலீஸார் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெற்று வருகின்றனர்.
 
நேற்று மதுரை பாண்டி கோவிலுக்கு அருகே பழுதாகி நின்ற ஒரு லாரி ஓட்டுனரிடம் சென்று லஞ்சம் கேட்டுள்ளனர். லாரி ஓட்டுனர் 100 ரூபாய் கொடுத்தும் அதை வாங்க மறுத்து, 200 ரூபாய் பெற்றுள்ளார். 
 
மணல் காரனே ரூ. 500 கொடுகிறான் உனக்கு என்ன பணம் கொடுக்கறதுக்கு என மிரட்டி ஓட்டுனரிடம் பணம் பறிக்கும் இந்த மாதிரி போலீஸ்காரர்களால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கலங்கம் உண்டாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்