திமுக நிர்வாகிகள் அதிரடி மாற்றம்: பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியாவா?

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (12:48 IST)
சேலம், நாமக்கல்  மாவட்ட திமுகவில் நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் பிரசாந்த் கிஷோர் தான் காரணமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த வீரபாண்டி ஆ ராஜாவுக்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டு அவர் இனிமேல் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக செயல்படுவார்.
 
அதேபோல் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்களும், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக டி.எம் செல்வகணபதி அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
மேலும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்தி செல்வன்  நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் அவருக்கு பதிலாக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்