நள்ளிரவிலும் மது விற்பனை - கனிமொழி பகீர் குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (14:34 IST)
தமிழகத்தில் நள்ளிரவிலும் மது விற்பனை ஜோராக விற்பனை செய்யப்படுகிறது என கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
தஞ்சையில் திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திமுக மகளிரணி செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி கலந்து கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
 
இதனால்,  500 மதுக்கடைகள் மதுக்கடைகள் மூடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால், எந்த எந்த கடைகளை மூடுவது என்பது குறித்து அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
 
மேலும், இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை செய்யக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், நள்ளிரவு 12 மணி வரை தமிழகத்தில் மது விற்பனை ஜோராக நடைபெறுகிறது என்றார். 
அடுத்த கட்டுரையில்