கொரொனா இரண்டாம் அலை காரணமாக ஐயப்பன் கோவில் கடந்த 5 மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நாளை முதல் கொரொனா விதிமுறைகளைப் பின்பற்றி பக்தர்களை கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு செல்லும்போது, 48 மணிநேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரொனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.