சில நாட்களாக ஒரு புகைப்படத்துடன் வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி உலாவந்து கொண்டிருக்கிறது. அதன் சாராம்சம் பின் வருமாறு 45 ஆகும் பிராய்லர் கோழிகளின் வளர்ச்சியை அதிக லாபத்துக்காக 20 நாட்களிலேயே வளரும் வண்ணம் பண்ணை உரிமையாளர்கள் ஊசி போடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் கோழிகளின் உணவிலும் வேதியியல் பொருட்கள் கலக்கப்படுகின்றன. இதனால் அந்த கோழிகளுக்கு பரவும் தன்மையுள்ள கேன்ஸர், அதனால் பிராய்லர் கோழிகளை யாரும் வாங்க வேண்டாம் என அந்த வாட்ஸ் ஆப் தகவல் சொல்கிறது. இதை உண்மை என்று நம்பி பலரும் அதைப் பகிர்ந்து வருகின்றனர்.