பிராய்லர் கோழியை உண்பதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா...?

கோழி இறைச்சி ஆரோக்கியமான ஒன்று ஆகும். கோழி இறைச்சி உண்டு வந்தால் உங்களுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆனால் தற்போது மக்கள் அனைவரும் பிராய்லர் கோழி மீது அதிக மோகம் கொண்டுள்ளனர்.
பிராய்லர் கோழி என்பது ஒரு ஆண்பால் பெண்பால் அற்ற உயிரினம். இதனை வளர்ப்பதற்கு பலவித வேதிப்பொருட்களை பயன் படுத்துகின்றனர் மற்றும் இதன் வளர்ச்சி மிகவும் குறைந்த நாட்களில் முழுமை அடைகின்றது.
 
தீமைகள்:
 
பிராய்லர் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளது.இதனை நீங்கள் அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும். எனவே பிராய்லர் கோழியை அறவே தவிர்த்திடுங்கள்.
பிராய்லர் சிக்கனை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதாக பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய கரணம்  தந்தூரி சிக்கன் மற்றும் கிரில் சிக்கன் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பது. எனவே தந்தூரி மற்றும் கிரில் சிக்கனை  அடிக்கடி உண்பதை தவிர்த்திடுங்கள்.
 
தற்பொழுது மிகவும் பொதுவாக உள்ள பிரச்சினை ஆண்களின் மலட்டு தன்மை ஆகும். இதற்கு முக்கிய காரணம் அடிக்கடி பிராய்லர் கோழியினை உண்பது ஆகும். இதை வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் ஹர்மோன்கள் ஆண்களின் இனப்பெருக்க  சக்தியினை பாதிக்கின்றது.
 
பிராய்லர் சிக்கனை தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் அதிக அளவில் ஆண்டிபயாடிக் சேரும். இதற்க்கு கரணம் அவை வளரும்  பொழுது அவற்றின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படுகின்ற ஆண்டிபயாடிக் ஒரு முக்கிய கரணம் ஆகும். தற்பொழுது பரவலாக ஏற்படும் பறவை  காய்ச்சல் முக்கியமாக பிராய்லர் கோழியின் மூலமாக தான் பரவுகின்றது என்றும் கூறப்படுகிறது.
 
பிராய்லர் சிக்கனின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படும் கெமிக்கல் பெண்களை விரைவில் வயதடைய செய்யும். முக்கியமாக இதில் சேர்க்கப்படும்  வளர்ச்சி ஹார்மோன் பெண்களை 12 வயதிற்குள் பூப்படைய செய்கின்றது.
 
பிராய்லர் கோழியில் அதிக அளவு பாக்டீரியாக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனை சரியாக சமைக்காமல் உண்டால் நமது உடலில் பாக்டீரியாக்கள் சேரும். எனவே இதனை அறவே தவிர்பது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்