இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தனக்கு வந்த புற்றுநோய் கோமியத்தின் மூலம் குணமானது எனக் கூறினார். இதனையடுத்து அறிவியலாளர்களும் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களும் அவரின் இந்த பிற்போக்குத்தனமானக் கருத்துக்கு எதிராகப் போர்க்கொடித் தூக்கினர். இதனையடுத்து பிரக்யாவுக்குப் புற்றுநோய் சிகிச்சையளித்த மருத்துவர் அவருக்கு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து பிரக்யாவின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் எஸ்.எஸ். ராஜ்புத் ’பிரக்யாவுக்கு முதல் நிலை புற்றுநோய் இருந்தது. 2008-ம் ஆண்டு மும்பை ஜேஜே மருத்துவமனையில் அவரின் வலது மார்பில் இருந்த கட்டி வெட்டி அகற்றப்பட்டது மறுபடியும் போபாலில் நடந்த அறுவை சிகிச்சையில் பிரக்யாவின் வலது மார்பின் பெரும் பகுதி அகற்றப்பட்டது. பின்னர் 017-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த பிரக்யா, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் இரு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றிக்கொண்டார்’ எனத் தெரிவித்துள்ளார்.