இந்நிலையில் தமிழகத்தில் இம்முறை அதிக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் கொரோனா கட்டுப்பாடுகளை பலர் பின்பற்றாத சூழலில் விதிகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், பொது சுகாதார சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த விதிகளை மேலும் கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். மேலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால், எச்சில் துப்பினால், கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.