இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 83,341 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. உலக நாடுகளில் ஒரே நாளில் அதிகமான உறுதியான பாதிப்பு எண்ணிக்கைகளை விட இது அதிகமாகும்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 38,53,406 லிருந்து 39,36,747 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 29.70 லட்சத்திலிருந்து 30.37 லட்சாமாக உயர்வு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 67,376 லிருந்து 68,472 ஆக அதிகரிப்பு.
மேலும், கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 66,659 பேர் குணமடைந்துள்ளனர், 1,096 பேர் உயிரிழந்துள்ளனர். அக மொத்தம் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8.31 லட்சம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்.