மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் நடக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் மசோதா உருவாக்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அந்த மசோதாவின் நிலை என்ன என்பது குறித்து பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.