அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்துக்கு ஆர்.எஸ்.பாரதி வருகை.. பெரும் பரபரப்பு..!

செவ்வாய், 13 ஜூன் 2023 (16:05 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி மற்றும் எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் ஆகியோர் வருகை தந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 
 
அரசு போக்குவரத்து கழக பணி நியமன முறைகேடு புகார் எதிரொலியாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி மற்றும் எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் ஆகியோர் செந்தில் பாலாஜி இல்லத்திற்கு வந்துள்ளதாகவும் செந்தில் பாலாஜி உடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வரும் நிலையில் அமலாக்கத்துறையினர்களுக்கு பாதுகாப்புக்கு வந்த சிஏஎஸ்எப் காவலர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவர்களை 6வது நுழைவாயிலில் தமிழக காவல்துறை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்