செந்தில் பாலாஜி வீட்டிற்கு மேலும் துணை ராணுவ படையினர் வருகை: என்ன நடக்கப்போவுது?

செவ்வாய், 13 ஜூன் 2023 (15:39 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் இருக்கும் நிலையில் தற்போது மேலும் சில துணை இராணுவ படையினர் வந்து இறங்கி இருப்பதாக இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர் என்பதும் அதுமட்டுமின்றி சென்னை தலைமைச் செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையிலும் சோதனையை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதுமட்டுமின்றி பணபரிவர்த்தனை குறித்து ஆலோசிக்க வங்கி அதிகாரிகளை அழைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் சில சந்தேகங்களை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு மேலும் 10 துணை ராணுவ படையினர் வருகை தந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஏற்கனவே வங்கி அதிகாரிகளுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கூடுதல் துணை ராணுவ படையினர் வருகை தந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்