நாகலாந்து மக்களை இழிவுபடுத்தினேனா? ஆர்.எஸ்.பாரதி மறுப்பு

திங்கள், 6 நவம்பர் 2023 (07:50 IST)
நாகலாந்து மக்களை நான் இழிவுபடுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி என ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார்.

நாகலாந்து மக்கள் நாய்க்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதை கவுகாத்தி உயர்நீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது என்றும், நாகலாந்து மக்கள் நாய்க்கறி உண்பவர்கள் என ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளுநர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார்.

முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.பாரதி நாகாலாந்து மக்கள் நாய்க்கறி சாப்பிடுவதாக கூறிய நிலையில் ஆளுநர் ரவி தனது சமூக வலைத்தளத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் அதில் கூறியிருந்ததாவது:

நாகலாந்து மக்களை அவமதிக்கும் வகையில் திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பது இழிவானது, ஏற்றுக் கொள்ள முடியாதது. மேலும் நாகாலாந்து மக்கள் வீரம் மிக்கவர்கள், நேர்மையானவர்கள், கவுரவமானவர்கள், இந்தியாவையே பெருமைப்படுத்தும் நாகலாந்து மக்களை அவமதிக்க வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்