ரயில்களில் ஓசியில் பயணித்தவர்களிடம் ரூ.3.18 கோடி அபராதம் வசூல்
வெள்ளி, 17 மார்ச் 2023 (23:22 IST)
சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் ரூ.3.18 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள மிகப்பெரிய போக்குவரத்தாக ரயில்வேதுறை உள்ளது.. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் வழியே பல இடங்களுக்குப் பயணமாகி வருகின்றனர்.
பல மாநிலங்கள் இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சென்னை போன்ற மாநகர்களில் செல்லும் லோக்கல் பாசஞ்சர் ரயில்கள் மூலம் பல பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால், பேருந்தைவிட ரயில்களில் டிக்கெட் விலைகுறைவு என்றாலும் சிலர் டிக்கெட் எடுக்காமல் செல்வதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.,
இந்த நிலையில் சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் ரூ.3.18 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டு ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் சென்றவர்களிடமும் ; பதிவு செய்யாத சரக்குகள் எடுத்துச் சென்றவர்களிடமும் ரூ.1.55 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.