இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா துபாயில் பிரமண்டமாக நடைபெற்றது. இது குறித்து தயாரிப்பாளர் திரு.கண்ணன் ரவி கூறும்போது, துபாயில் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் பெரிய ஸ்டார்களின், பெரிய படங்களின் இசை வெளியீட்டு விழாவை தமிழ் சினிமா பார்த்திருக்கிறது. இப்போது, எனது முதல் தயாரிப்பான 'இராவண கோட்டம்' படத்தின் இசை வெளியீட்டு விழா தி இந்தியன் ஹை ஸ்கூல், ஓத் மேத்தா, ஷேக் ரஷித் ஆடிட்டோரியத்தில் மார்ச் 18 மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
கார்த்திக் நேதா எழுதிய யாசின் நிசார் மற்றும் வந்தனா சீனிவாசன் பாடியுள்ள படத்தின் முதல் சிங்கிளான 'அத்தன பேர் மத்தியில' அதன் மெல்லிசை ட்யூன் மற்றும் அழகான வரிகளுக்காக இசை ஆர்வலர்களிடமிருந்து மகத்தான வரவேற்பைப் பெற்றது. பாடல் வெளியாகி 48 மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் ஆர்கானிக் பார்வைகளைக் கடந்துள்ளது.