நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன் !

புதன், 5 பிப்ரவரி 2020 (15:51 IST)
நடிகர் விஜய்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ’பிகில்’ திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லொகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
வருமான வரி ஏய்ப்பு புகாரின்பேரில் ஏஜிஎஸ் நிறுவனத்தில் ரெய்டு நடந்து வருவதாகவும் சென்னை தி நகரில் உள்ள ஏஜிஎஸ் நிறுவன உரிமையாளர்களின் வீடு மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் என ஒரே நேரத்தில் 20 இடங்களில் ரெய்டு நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது
 
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த ’பிகில்’ திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. இந்த படம் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் இதனால் தயாரிப்பு நிறுவனத்தின் மிகப்பெரிய லாபம் கிடைத்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடைபெற்று வருவதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. எனவே, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தில் ஐடி  சோதனை நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறையினர் நெரில் சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்