ரூ.2,000 நோட்டுகளை பேருந்துகளில் மாற்றலாம்.. காலையில் வெளியான சுற்றறிக்கை வாபஸ்..!

திங்கள், 22 மே 2023 (17:54 IST)
2000 ரூபாய் நோட்டுகளை பயணிகளிடமிருந்து நடத்துனர்கள் வாங்க கூடாது என இன்று காலை போக்குவரத்து துறை சுற்றறிக்கை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டை வாங்கலாம் என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்த நிலையில் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டை டாஸ்மாக் கடைகளில் வாங்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் பயணிகளிடமிருந்து நடத்துனர்கள் வாங்க வேண்டாம் என்று கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் 2000 ரூபாய் நோட்டை பயணிகளிடம் இருந்து வாங்கலாம் என்று அறிவித்தனர்.
 
 இந்த நிலையில் இன்று காலை வெளியான சுற்றறிக்கை வாபஸ் பெறுவதாகவும் 2000 ரூபாய் நோட்டை பயணிகளிடமிருந்து நடத்துனர் வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பயணிகள் தவிர வெளி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை போக்குவரத்து துறையில் மாற்ற அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்