சசிகலாவின் செல்போன் உரையாடல் குறித்து முன்னாள் அமைச்சர் காட்டாமாகப் பதில் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சசிகலா தினந்தோறும் ஆடியோவை வெளியிட்டு வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சற்று முன் வெளியான இன்னொரு வீடியோவில் எம்ஜிஆரே என்னிடம் ஆலோசனை கேட்பார் என்றும் நான் சொல்லும் ஆலோசனைகளை எம்ஜிஆர் கவனத்துடன் கேட்டு கொண்டு அதன்படி நடப்பர் என்றும் கூறியுள்ளார்
மேலும் ஜெயலலிதா டென்ஷனாக இருக்கும்போது நான் தான் அவரை சமாதானப் படுத்தினேன் என்றும் கூறிய சசிகலாவை அதிமுகவில் ஜானகி, ஜெயலலிதா என பிரிந்தபோது இரண்டையும் ஒருங்கிணைத்ததில் எனக்கு தான் மிகப் பெரிய பங்கு உண்டு என்று கூறினார்.
இளம் வயதிலேயே அரசியல் அறிவோடு இருப்பதை பார்த்து எம்ஜிஆரை என்னை பாராட்டி இருக்கிறார் என்றும் நான் கூறும் பல விஷயங்களை அவர் ஒப்புக் கொண்டு அதன்படி நடந்து இருக்கிறார் என்றும் சசிகலா கூறியிருக்கிறார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
இந்நிலையில் சசிகலாவின் ஆடியோ குறித்து முன்னாள் ஆர்பி அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளதாவது:
அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரின் தலைமையில் அதிமுகவை பலடுத்த அனைவரும் ஓரணியில் சென்றுகொண்டுள்ளனர். 7 கோடி பேரில் எங்கேயே இருந்துகொண்டு பேசுபவரின் பேச்சினால் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவருக்கு அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையோடு பாடம் புகட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.