சத்துணவில் அழுகிய முட்டை வழங்கியதை, பாஜக பல முறை கண்டித்துள்ளது- அண்ணாமலை

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (20:19 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலடத்தில் தரமற்ற வகையில் உணவுகள் விற்கப்படுகிறதா? என்பதைக் கண்டறிய இன்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர்.அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகளில் சத்துணவு முட்டைகள் இருந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் சமூக வலைதளத்தில்,

‘’கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில், மாணவர்களுக்கு சத்துணவில் அழுகிய முட்டை வழங்கியதை,  பாஜக பல முறை கண்டித்துள்ளது. எனினும், மாணவர்களுக்குத் தரமான முட்டைகள் வழங்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல், அதைக் குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தார் அமைச்சர் திருமதி. கீதாஜீவன்.

தற்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில், தனியார் உணவகத்தில், குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய, அரசின் சீல் வைக்கப்பட்ட முட்டைகள் இருந்த செய்தி வெளிவந்துள்ளது.

தரமான முட்டைகளை தனியார் உணவகங்களுக்கு விற்று விட்டு, குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அழுகிய முட்டைகள் வழங்குவதைச் சற்றும் ஏற்க இயலாது. உடனடியாக, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர் தூக்கத்தில்  இருந்து அமைச்சர் கீதாஜீவன் விழித்துக்கொண்டு, தனது துறை தொடர்பான பணிகளை கவனிக்க வேண்டும் என்றும்  பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்