காதல் முறிந்த ஆத்திரத்தில் காதலியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்திய வாலிபர்

ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (22:51 IST)
சென்னை அருகே காதலித்த இளம்பெண் திடீரென மனம் மாறியதால் பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





சென்னை அம்பத்தூரை பகுதியை சேர்ந்த 21 வயது பார்த்திபன் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த 20 வயது மைதிலி என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் பார்த்திபனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர்களுடைய காதலிலும் முறிவு ஏற்பட்டது.

இந்த நிலையில் கால் குணமாகி மீண்டு வந்த பார்த்திபன் தன்னை மீண்டும் காதலிக்குமாறு மைதிலிக்கு டார்ச்சர் கொடுத்துள்ளார் இதனால் மைதிலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பார்த்திபன் இன்று மைதிலி சாலை ஒன்றில் நடந்து வரும்போது பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்து கொளுத்தினார். மேலும் தான் காதலித்த பெண்ணுடன் தன்னுடைய உயிரும் போகட்டும் என்று அவர் தன்னைத்தானே கொளுத்தியும் கொண்டார்.

இருவரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இருவரும் மரணம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்