பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரோஜர் ஃபெடரர் விலகல்: என்ன காரணம்?

திங்கள், 7 ஜூன் 2021 (07:57 IST)
கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே கடந்த மாதம் 30 ஆம் தேதியிலிருந்து பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை நவோமி ஒசாகா என்பவர் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இப்பொழுது நவோமி ஒசாகாவை ரோஜர் ஃபெடரர் அவர்களும் விலகுவதாக அறிவித்தார். நேற்றைய போட்டிக்குப் பின் அவர் தனது உடல்நிலை போட்டிக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அதனால் எனது அணியினர்களிடம் ஆலோசனை செய்து போட்டியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்
 
39 வயதான ரோஜர் ஃபெடரர் ஏற்கனவே இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் ரோஜர் ஃபெடரர் நான்காவது சுற்று முடிந்தவுடன் போட்டியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்