சென்னை உத்தண்டி பிரதான சாலையில் மனோஜ் குமார் என்பவர் அடகுக் கடை வைத்துள்ளார். நேற்று மாலை அவரது தம்பி சுரேஷ் கடையில் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், நகை அடகு வைக்க வேண்டும் என்று கூறி பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அடகுக் கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்யையடிக்க வந்த 6 பேரின் உருவங்களும், மோட்டார் சைக்கிள் எண்களும் பதிவாகி உள்ளன. அதை வைத்து காவல் துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.