சாலை விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து; தமிழக அரசு அதிரடி

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (15:49 IST)
வாகனம் ஓட்டுபவர்கள் இனி சாலை விதிகளை மீறினால் 6 மாத காலம் வரை ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் மற்றும் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க  வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

 
தமிழக அரசின் சாலை பாதுகாப்பு குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில போக்குவரத்து அமைச்சர்  விஜயபாஸ்கர் தலைமை ஏற்றார். சாலை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
 
அதில்,
சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் இனி அவர்களது அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 
 
சாலையில் போக்குவரத்து காவலர்கள் ஆய்வின் போது, அசல் ஓட்டுநர் உரிமத்தை காட்ட வேண்டும்.
 
காப்பீடு சான்றிதழ் இல்லையெனில், வாகனங்கள் போக்குவரத்து காவலர்களால் சிறைபிடிக்கப்படுவார்கள். காப்பீட்டை புதுபிக்க  தவறியவர்களுக்கும் இந்த விதி பொறுந்தும்.
 
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். 
 
சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
 
சூழ்நிலையை பொறுத்து வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் நிரந்தமாகவும் ரத்து செய்யப்படும். 
 
வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டை கட்டாயம் அணிய வேண்டும்
 
வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல், பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணியவேண்டும். கனரக வாகனங்களில் அதிக  பாரம் மற்றும் அதிக ஆட்களை ஏற்றுவதும் போக்குவரத்து விதிமீறல் தான். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கனரக வாகன ஓட்டிகளின் உரிமம் தற்காலிகமாக அல்லது விதிமீறலை பொறுத்து நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
 
அடுத்த கட்டுரையில்