சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் அரசியலில் குதிக்கவிருப்பதாக அறிவித்து சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்த நிலையில் அவர் எப்போது அதிகாரபூர்வமாக கட்சியை அறிவிப்பார் என்று ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பிற அரசியல் கட்சிகளும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.
இந்த நிலையில் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற கோவை, திருச்சி, மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் தலைமை நிர்வாகிகள் ஆலோசனை செய்ய இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.