ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக திமுக குற்றம் சாட்டியிருந்தது. இதனால் இந்த தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் இந்த தேர்தல் வாக்குப்பதிவை நேரலை செய்ய உள்ளதாக கூறியுள்ளது.
ஆர்கே நகர் தேர்தல் பிரச்சாரங்கள் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். அதே நேரத்தில் அங்கு பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்று வருவதால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதில் தேர்தல் ஆணையத்தையும் குறை சொல்லியிருந்தது.
ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற நேக்கத்துடனேயே திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. ஒவ்வொரு வாக்காளர்களும் ஓட்டுக்கு பணம் பெறுவதாக திமுக சித்தரிக்கிறது என கூறியுள்ளது தேர்தல் ஆணையம். மேலும் தேர்தல் வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கையும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.