நொய்யல் ஆற்று மணல், கழுதைகள் மூலம் மூட்டை மூட்டைகளாக கடத்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோவையில் மேற்கு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையான அடிவாரத்தின் நொய்யல் ஆற்றில் மணல் வெட்டி எடுத்து மூட்டைகளாக கழுதைகள் மூலம் கடத்தி வருகின்றனர்.
இயந்திரங்கள் கொண்டு மணலை வெட்டி எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் அந்த பகுதி விவசாய மக்கள் நொய்யல் ஆற்றில் மணல் கடத்துவதை தடுக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் காவல் துறையினர் அப்பகுதியை கண்காணித்து கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கம் அனுமதியுடன் ஆற்று மணல் அதிக அளவில் வெட்டி எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசாங்கத்திற்கு தெரியாமல் இவர்களும் ஒரு பக்கம் மணலை வெட்டி எடுத்து கழுதைகள் மூலம் கடத்தல் செய்கின்றனர்.