தமிழகத்தில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.
இருப்பினும் ஜனவரி 17 முதல் நடைபெற்று வந்த வகுப்புகள் கொரொனா இரண்டாம் அலைப் பரவலால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்குக் கற்பித்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்த்தல், மாணவர்களுக்கு மதிப்பெ வழங்குதல், விலையில்லாப் பாடப்புத்தகங்கள் வழங்குவது, நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை மேற்கொள்ளவேண்டி அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியத் தேவையில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.