தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: எத்தனை நாட்கள் தெரியுமா?

செவ்வாய், 30 நவம்பர் 2021 (18:33 IST)
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து சமீபத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது
 
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் குறிப்பிட்டுள்ள கடிதத்தில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டு உள்ளது என்றும் ஆனால் பொதுமக்கள் நலன் கருதி நடைமுறையிலுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15 வரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் ஆந்திரா கர்நாடகா மாநிலங்களுக்கு பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட நிலையில் கேரள மாநிலத்திற்கும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது
 
மேலும் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு வரும் மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு உதவும் முழு ஒத்துழைப்பு நல்கி ஒரு தோற்று நோய் முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்