ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! – முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு!

வியாழன், 25 நவம்பர் 2021 (12:19 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உலக நாடுகள் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளன.

எனினும் தற்போது ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஜெர்மனியில் இன்று ஒருநாளில் மட்டும் 66,884 கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. இந்நிலையில் ஜெர்மனியில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா என்பது குறித்து அந்நாட்டு அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்