இன்று மிக கனமழை & நாளை ரெட் அலர்ட் - மழையால் வாடும் சென்னை!!

புதன், 17 நவம்பர் 2021 (08:10 IST)
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை. 

 
தமிழகம் முழுவதும் கடந்த வாரம் கனமழை பெய்த காரணத்தால் சென்னையில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் தற்போது தலைநகர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மற்றும் அரபிக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதன்படி ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என்றும் அது மட்டுமின்றி பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னைக்கு நாளை அதிகனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்