ரியல் எஸ்டேட் தொழிலபதிர் கடத்தப்பட்டரா? தப்பி ஓட்டமா? : கரூர் அருகே பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2016 (17:05 IST)
கரூர் அடுத்துள்ள தாந்தோன்றிமலை ராயனூர் பகுதியை சார்ந்தவர் கந்தசாமி, இவரது மகன் ராமலிங்கம் (வயது 45), இவர் காங்கிரஸ் கமிட்டியில் தாந்தோன்றி நகர தலைவராகவும், அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் புரிந்து வருகின்றார். 


 

 
இந்நிலையில் கடந்த ஜூன் 30 ம் தேதி காலை நடைபயிற்சி மேற்கொண்டவர் திடீரென்று காணவில்லை. இந்நிலையில் கரூர் அருகே உள்ள பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி சாந்தி புகார் அளித்துள்ளார். 
 
போலீஸ் விசாரணையில் நடைபயணம் மேற்கொள்ளும் போது, ராமலிங்கம் செல்போன் எடுத்து செல்லமாட்டார் என்றும், இந்த நடைபயணமானது கரூர் அடுத்துள்ள ராயனூரில் உள்ள கோயில் ஆர்ச் பகுதியில் இருந்து தினந்தோறும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளுவது தெரியவந்துள்ளது. 
 
மேலும் இவர் கடத்தப்பட்டாரா அல்லட்து கடன் தொல்லையால் தப்பி ஒடியுள்ளாரா என்று பல்வேறு கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இந்த தொழிலதிபர் காணமல் போன விவகாரம் காங்கிரஸ் கட்சி மத்தியில் மட்டுமில்லாமல் ரியல் எஸ்டேட் தொழில் புரிபவர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்
அடுத்த கட்டுரையில்