"ரேபிட் டெஸ்ட்" கருவி இன்னும் வரவில்லை: சென்னை ஆணையர் பகீர் பேட்டி!!

சனி, 11 ஏப்ரல் 2020 (13:53 IST)
கொரோனாவை விரைவாக கண்டறியும் "ரேபிட் டெஸ்ட்" கருவி இன்னும் இந்தியாவுக்கே வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒருபக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
 
இந்நிலையில் கொரோனாவை கொரோனாவை விரைவாக கண்டறியும் "ரேபிட் டெஸ்ட்" கருவி வரவைக்கப்பட்டு விரைவாக சோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என கூறியிருந்த நிலையில், கொரோனாவை விரைவாக கண்டறியும் "ரேபிட் டெஸ்ட்" கருவி இன்னும் இந்தியாவுக்கே வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சற்றுமுன் பேட்டியளித்ததாவது, கொரோனாவை விரைவாக கண்டறியும் "ரேபிட் டெஸ்ட்" கருவி இன்னும் இந்தியாவுக்கே வரவில்லை. ரேபிட் டெஸ்ட் கருவிகள் வராததற்கான காரணங்கள் தெரியவில்லை என தெரிவித்தார். 
 
இதனோடு, விரைவில் சென்னையிலும் வாகனங்களுக்கு வண்ண பாஸ்கள் வழங்கப்பட உள்ளன. முகக் கவசம், கையுறை அணிந்து செய்தித்தாளை விநியோகிக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்