கமலுடன் ரிசார்ட்டில் தங்கிய ரம்யா கிருஷ்ணன்?: கடுப்பான கௌதமி!

செவ்வாய், 8 நவம்பர் 2016 (09:58 IST)
நடிகை கௌதமி 13 வருடமாக சேர்ந்து வாழ்ந்த நடிகர் கமலை பிரிவதாக கடந்த வாரம் அறிவித்தார். இது தமிழகத்தில் ஹட் டாப்பிக் ஆனது. மகளின் எதிர்காலம் குறித்து பிரிவதாக கௌதமி கூறினாலும் வெளியில் இந்த பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.


 
 
கமலின் மகள் நடிகை ஸ்ருதி ஹாஸன் தான் கமல், கௌதமி பிரிவுக்கு காரணம் என ஒருபக்கம் கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என ஒரு புதிய குண்டை தூக்கி போடுகிறார்கள்.
 
சமீபத்தில் நடிகர் கமலும், ஸ்ருதி ஹாஸனும் நடித்து வரும் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. அப்போது தான் ரம்யா கிருஷ்ணனால் பிரச்சனை ஆரம்பித்தது என செய்திகள் வருகின்றன.
 
சபாஷ் நாயுடு படத்தின் ஆடை வடிவமைப்பாளராக கௌதமி இருந்தார். அப்போது கௌதமி வடிவமைத்து கொடுத்த கவுனை அணிய ரம்யா கிருஷ்ணன் மறுக்க கௌதமி கடுப்பாகி சென்னைக்கு வந்துவிட்டார்.
 
இந்நிலையில் கமல் ரிசார்ட் ஒன்றில் ரம்யா கிருஷ்ணனுடன் தங்கியதாக கௌதமிக்கு தகவல் கிடைக்க தன்னுடன் மோதிய ரம்யா கிருஷ்ணனுடன் எப்படி தங்கலாம் என கௌதமி கடுப்பாகிவிட்டாராம். இது தான் கௌதமி கமலை பிரிவதற்கு காரணம் என இணையதளங்களில் பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்