தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அவசியமின்றி வெளியே வரும் நபர்களை போலீஸார் கைது செய்து பின்னர் விடுதலை செய்து வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே திரிவதை தவிர்க்குமாறு அடிக்கடி ட்விட்டரில் தெரிவித்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் “ஊரடங்கை உதாசீனப்படுத்தி ஊர்சுற்றும் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் ஓர் வேண்டுகோள்: உலகையே ஒரு குடையின்கீழ் கொண்டு வந்து ஆண்ட இங்கிலாந்தின் இளவரசரும், பிரதமரும் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டு போராடி உயிர்பிழைத்துள்ளனர். இதை அனைவரும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்! “ என்று தெரிவித்துள்ளார்.