இன்று முதல்வர் பழனிசாமி தமிழக தொழில் அதிபர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து ஊரடங்கு முடியும் நிலையில் முதற்கட்டமாக சில ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர ஆலை, கண்ணாடி, டயர் ஆலைகள், மிகப்பெரிய காகித ஆலைகள் உள்ளிட்ட ஆலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.