புனித ரமலான் நோன்பு தொடங்கியது

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (09:20 IST)
தமிழகத்தில் முஸ்லீம் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் புனித ரமலான் நோன்பு தொடங்கியது.
 

 
உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள முஸ்லீம் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நோன்பு புனித ரமலான் நோன்பு ஆகும். வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், நேற்று தமிழகத்தில் ரமலான் நோன்பு தொடங்கியது. இதை தமிழக அரசின் தலைமை காஜியார் முறைப்படி அறிவித்துள்ளார்.
 
இதனையடுத்து, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிறை காணமுடிந்ததாக தெரிவித்தனர். இதன்காரணமாக, புனித ரமலான் நோன்பு தொடங்கியது. இதனால்,  இஸ்லாமியர்கள் இந்த நோன்பை இன்று முதல்  30 நாட்கள் கடைபிடிப்பர். நோன்பின் கடைசியில் புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.
 
புனித ரமலான் நோன்பு தொடங்கியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றது. 
 
அடுத்த கட்டுரையில்