தமிழகத்தின் 47வது தலைமை செயலாளர் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (11:14 IST)
தமிழகத்தின் 47வது தலைமை செயலாளர் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சண்முகம் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் அவர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனை அடுத்து நாளை முதல் புதிய தலைமைச் செயலாளர் யார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மத்திய மீன்வளம் கால்நடை துறை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தற்போது தமிழக அரசின் புதிய செயலாளராக பதவி ஏற்க உள்ளார். அவர் நாளை தலைமைச் செயலகத்தில் பதவியேற்பார் என்று தெரிகிறது
 
தமிழக அரசின் 47வது தலைமைச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் ராஜீவ் ரஞ்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்