ரஜினி வாயில சர்க்கரை போடனும்... அப்படி என்ன சொல்லிட்டாரு??

திங்கள், 9 டிசம்பர் 2019 (12:40 IST)
ரஜினி வாய்க்கு சர்க்கரைப் போட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் பேசியிருக்கிறார். 
 
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மற்றும் அமலாக்கத்துறை வழக்கு ஆகியற்றால் சிறையில் இருந்த சிதம்பரம் 106 நாட்களுக்கு பிறகு சிறைவாசத்தை முடித்துக்கொண்டு ஜாமீனின் வெளியே வந்தார். இந்நிலையில் இவர் தமிழகம் வந்திருந்த போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 
 
அப்போது அவர் கூறியதாவது, தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பல பிழைகள் உள்ளன. விதிமீறல் குறித்து திமுக, காங்கிரஸ் கூறி வருகிறது. பொருளாதாரம் தெரியாதவர் நிதியமைச்சராக உள்ளார்,என்று சுப்பிரமணிசாமி கூறிய கருத்து சில நேரங்களில் சரியாக தான் உள்ளது. 
 
தவறான பொருளாதாரக் கொள்கை, விலைவாசி, வேலையின்மை குறித்து டிசம்பர் 14 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடக்க உள்ளது. தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு அரசியல் மாற்றம் வரும் என கூறிய ரஜினி கூறியுள்ளார். எனவே அவர் வாய்க்கு சர்க்கரைப் போட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்