ரஜினியால் கமலுக்கு தான் நஷ்டம்: அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (14:53 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவார்கள் என கடந்த சில நாட்களாக ஒரு செய்தி பரபரப்பாக பரவி வருகிறது. சமீபத்தில் நடந்த ’கமல்ஹாசன் 60’ என்ற நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் ரஜினி, கமல் இருவரும் இணைந்து அரசியலில் செயல்பட்டால் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் நல்லது என்று வேண்டுகோள் விடுத்தார். 
 
இந்த வேண்டுகோளை அடுத்தே இருவரும் இணைய வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. சமீபத்தில் அளித்த பேட்டியில் தேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம் என்று இருவரும் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் கமலஹாசன் கட்சி போட்டியிட முடிவு செய்திருப்பதை அடுத்து ரஜினி மக்கள் மன்றம் அக்கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 

ஆனால் சற்று முன் வெளியான ரஜினி மக்கள் மன்றத்தின் அறிக்கையின்படி வரும் உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதனை அடுத்து ரஜினி மக்கள் மன்றத்தின் ஆதரவு கமலுக்கு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. எனவே ரஜினி-கமல் ஆகிய இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவார்களா? என்று கேள்வி மீண்டும் எழுந்து உள்ளது 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’உள்ளாட்சித் தேர்தலை ரஜினிகாந்த் அவர்கள் புறக்கணிப்பது கமலஹாசனுக்கு நஷ்டம் தான் என்றும் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இதே தான் ரஜினி கூறுவார் என்றும் தெரிவித்துள்ளார்.  அதாவது ரஜினி கமல் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்றே அவரது இந்த பேட்டி என் நோக்கமாக உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்