டிரெண்ட் லிஸ்டின் டாப்பில் சூப்பர் ஸ்டார்!

Webdunia
செவ்வாய், 21 ஜனவரி 2020 (16:40 IST)
ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரித்தும் டிவிட்டரில் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.
 
துக்ளக் பத்திரிக்கையின் 50 ஆவது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், திராவிட கழகத்தில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிவருகின்றனர்.  
 
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது நான் செய்திகளில் வெளிவந்ததைத்தான் கூறினேன் என் ஆதாரத்தை காட்டி இதற்காக என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என கூறினார். ரஜினியின் இந்த பேச்சுக்கு பராட்டுகளும் விமர்சனங்களும் வந்துக்கொண்டிருக்கின்றன.
 
அந்த வகையில் சமூக வலைத்தளமான டிவிட்டரிலும் டிவிட்டர்வாசிகள் ரஜினியை புகழ்ந்தும், திட்டியும் வருகின்றனர். அந்த வகையில், #மன்னிப்பு_கேட்க_முடியாது, #ரஜினிஒருமெண்டல், #பெரியார் போன்ற ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்கி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்